Friday 12 July 2013

புன்னகை

ஒவ்வொரு நாள் சந்திக்கும் போதும் புதிதாக தோன்றினாள்.

அவளிடமே காரணத்தைக் கேட்டேன்

சற்று வெட்கத்துடன் பதில் சொல்ல முடியாமல்

மௌனமாக புன்னகை செய்தாள்.

அப்போதுதான் புரிந்தது

நான் பேசிக்கொண்டிருப்பது என்னவள் என நினைத்து

இந்த அழகான பூக்களோடு

நான்

பல வருட கனவு

எண்ணிலடங்கா உன் நினைவுகள்

என்னையே நான் மறந்த நாட்கள்

உன் ஒரு பார்வைக்காக காத்திருந்த தருணங்கள்

உன் கண்களை காண துடிக்கும் என் கண்ணீர் துளிகள்

நீ செய்யும் ஒவ்வொரு செயலையும் பார்த்து இமைக்க மறந்த என் இமைகள்

உன் பாதச் சுவடுகளை பார்த்து பார்த்து தன் பாதையே மறந்த என் பாதங்கள்

கனவில் உன்னைக் கண்டதால் விழிக்க மறந்த எனது விழிகள்

உன் நிழலைத் தேடி அலைந்த என் நிஜங்கள்

உன் வருகையை தேடி தேடியே தொலைந்த என் நேரங்கள்

உன் பாதைகளை தேடிச் சென்ற என்னுடைய பயணங்கள்

உன் பெயரோடு சேர்ந்துவிட தவிக்கும் என் பெயர்

உன் வார்த்தைகளை உச்சரிக்க ஏங்கும் என் உதடுகள்

உன்  மௌனத்திற்கு உயிர் கொடுக்க துடிக்கும் என் மொழி

உன்  கனவுகளை களவாட நினைக்கும் என் கற்பனைகள்

உன்னுடனான பகலுக்காக ஏங்கும் என் இரவுகள்

நீ என்னை கடந்து செல்கையில் தன் வேளையையும் மறந்து துடிக்காமல் உன்னை கவனித்த என் இதயம்

உன்னை நினைத்து நினைத்து என்னையே இன்று மறக்க துணிந்த என் மனம்

உனக்காக என்னை மறந்த நான்.

என் கருவறை

உன்னை பத்துமாதம் கருவறையில் உன் தாய் சுமந்தாள் அது அவளின்
கடமையாககூட இருக்கலாம்,
ஆனால் உன்னை
என் இதயம் என்னும் கருவறையில் சுமந்துகொண்டிருக்கிறேன்.
கருவறையில் இருந்து நீ வெளிவரும்போது
உன் தாய் அடைந்த வேதனையைப் போல்
உன்னைப் பிரிகின்ற ஒவ்வொரு விநாடியும்
என் இதயம் அதை உணர்கிறது.  
என் இதயம் என்னும் கருவறையில்
வாழ்ந்துகொண்டிருக்கும் உன்னை
நான் இறந்த பின்பு கூட நிச்சயமாக சில நிமிடங்கள் அது சுமக்கும்


நினைவுகள்

அவள் நினைவுகளை
என் இதயத்தில் சேகரித்து வைத்தேன் அவள் அனுமதியின்றி
இன்று என்னிடம் கேட்கிறாள் யார் நீ என்று
எப்படி சொல்வேன்

அவள் என் இதயத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறாள் என்பதை???

உன்னால்

வைரத்தின் அழகைப் பற்றி எல்லோரும் சொன்னார்கள்
அன்று நான் நம்பவில்லை
இன்று தான் அதன் உண்மையான அழகை ரசித்துக்கொண்டிருக்கிறேன்

அது உன் கழுத்தில் குடியிருக்கையில்

தாய்

பிரசவத்தின் போது வலியால் துடிக்கிறாள் இவள்
சுற்றி இருந்தவர்களின் கண்களில் கண்ணீர் சற்று பரிதாபமாக
ஆனால் குழந்தை சிரித்துக்கொண்டு தான் இருக்கிறது
இப்போதுதான் இவள் கண்களில் கண்ணீர் வருகிறது
ஒரு வேளை தன் தாய் அடைந்த வேதனையை நினைக்கிறாளோ

என்னவோ!!!

இயலாமை

அவளுக்கு நான்
ஒரு பூவாவது கொடுக்க வேண்டும் என்றுதான் நினைத்திருந்தேன்
ஆனால் அவளுக்குதான் என் மீது எவ்வளவு பாசம்
பூச்செண்டோடு என்னைப் பார்க்க வந்திருக்கிறாள்
என் கைகள் அதை வாங்க துடிக்கின்றன
என்னால் தான் முடியவில்லை....

இந்தக் கல்லறையை விட்டு வர 

என் கனவில்

கண் விழித்து அவளுக்காக காத்திருந்தேன் 
ஏனோ அவள் இன்னும் வரவில்லை 
ஆனால் இப்போது அவள் நிச்சயம் வருவாள் கண்முன் ... 
என் கனவில்!!!

சந்தித்த நாள்

முதன்முதலில் அவளை சந்தித்த அந்த நாளைவிட
அவள் என்னை விட்டு பிரிந்த அந்த நாளை
என்னால் இன்னும் மறக்கமுடியவில்லை
அன்றுதான் அவளின் உண்மையான காதலை நானே உணர்ந்தேன்

அவள் கண்களில் இருந்து வழிந்த அந்த கண்ணீரின் வழியே

இடம்

அவளின் மனதில் ஒரு இடம் கேட்டேன்
கொடுத்தாள்....
எனக்கு மட்டுமல்ல என் காதலுக்கும் சேர்த்து

இந்தக் கல்லறையை!!!

சம்மதம்

அன்றோ 
அவளின் அந்த அழகான சிரிப்பினால் 
என் மனதை கொன்றாள்
இன்றோ 
நான் அவளிடம் என் காதலை சொன்ன பின்பு 
மௌனத்தினால் என்னை கொல்கிறாள்...

இருந்தும் 
அவளை நான் இன்னும் 
காதலித்துக் கொண்டுதான் இருக்கிறேன் 
அவள் மௌனத்தை சம்மதமாக நினைத்து

காரணம்

தினமும் சாலையில் நடந்து செல்கையில்
எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி 
சென்று கொண்டிருந்தேன், நீ என்னைக்
கடந்து சென்ற அந்த நொடி வரை.

இன்றும் அப்படியே செல்கிறேன்
ஆனால் என் கண்கள்  மட்டும் ஏனோ 
உன்னை மட்டுமே தேடி அலைகிறது


காரணம் சொல்வாயடி...

Sunday 30 June 2013

அவள்

அவளை எதிர்பார்த்து காத்திருந்தேன்

ஏனோ இன்னும் வரவில்லை...

ஒருவேளை அவளும் என்னை எதிர்பார்க்கிறாளோ!!!


மரணம்

அவளை பார்க்கும் வரை

எதையும் எதிர்க்கும் துணிவு கொண்டிருந்தேன்

மரணத்தைத் தவிர,

அந்த மரணத்தையும் சந்திக்கும்

வாய்ப்பைத் தந்தது இந்தக் காதல்

அவளை பார்த்த பின்பு.

அனுமதி

திறந்திருந்த போது என் அனுமதியுடன்
தேடி அலைந்து திரிந்த இவர்கள்
இப்போதும் அதையே செய்து கொண்டிருக்கிறார்கள்
என் அனுமதி இன்றி
மூடிய பின்பும்.
கனவிலாவது நீ வரமாட்டாயா என்ற ஏக்கத்தில்...
                   என்னுடைய கண்கள்

உன் கண்கள்

உன் கண்களை பார்த்த கணம்
என் இதயத்தில் ஏனோ ரணகளம்
என் காதலை சொல்ல ஏங்கினேன்
உன் கண்களை பார்த்து மயங்கினேன்

பெண்ணே உன்னை காணும் முன்னே
நான் என்னிடமே பேசியதில்லையே
உன்னைக் கண்ட பின்னே நான்
யாரிடமும் பேசவில்லையே

நான் இதுவரை எப்படி இருந்தேன் தெரியவில்லை
ஏன் இப்படி ஆனேன் புரியவில்லை
என் இதயம் கூட என் பேச்சை கேட்கலையே
அது உன்னை தானே நினைக்குதே
என் கண்கள் கூட உன்னை தான் தேடுதே
என் கால்கள் கூட உன் வழி போகுதே
என் வீட்டு கண்ணாடி கூட என்னைப்பார்த்து சிரிக்கிறதே

அடி பெண்ணே அடி பெண்ணே உன்னைக் காணும்முன்னே
ஒரே ஒருமுறை தான் சாவு என நினைத்திருந்தேன்
உன்னைக் கண்ட பின் ஏன் இப்படி
தினம் தினம் சாகின்றேன்

பெண்ணே இது உன் குற்றமா இல்லை
காதலின் ஆரம்பமா பேரின்பமா
இதைச் சொல்லத் தெரியலையே
சொல்லவும் முடியலையே இருந்தும் இதை
நான் ரசிக்கின்றேன்

அன்பே என் அன்பே உன்னை பார்த்த பின்பே
நான் எனை மறந்தேன் என் இதயத்தை இழந்தேன்
கனவிலே நான் மிதக்கின்றேன்
நினைவிலே நான்  பறக்கின்றேன்
என்னிடமே பொய் சொல்கிறேன்
உன்னிடம் சிக்கித்தவிக்கிறேன்
என்னைக் கொல்லாமல் கொல்லும் இந்தக் காதலை ரசிக்கிறேன்

பெண்ணே உனக்காகத் தானே நான் என்னை இழந்தேன்
நீயும் உன் உதட்டிலிருக்கும் அந்த சொல்லை இழக்க ஏன் மறுக்கிறாய்
ஏனடி மௌனம் கொள்கிறாய் ஏன்
இப்படி எனையும் கொல்கிறாய்

உன்னை முதன் முதல் பார்க்கையில் சிரிக்கிறாய்
பின்பு சற்று வெறுக்கிறாய்
இதுதான் காதலின் வேலையோ இல்லை
பெண்களின் மூலையோ புரிந்ததடி
இந்தக் காதலின் உண்மையே

Saturday 29 June 2013

காற்றாய் நான்

பார்வை ஒருமுறை படுவதற்கே
பல நாளாய் காத்திருந்தேன்
பட்ட மரம் துளிர்குமென்று
நம்பி நாளும் தவமிருந்தேன்...

கிளைகள் நிறைய காய்க்குமென்றே
ஆசையோட நீர் இறைச்சேன்
ஆணிவேரே இல்லையென்று
அப்புறம் தான் நானறிஞ்சேன்...

பட்ட மரம் பற்றி எரிய
காற்றிலே கரைந்து நான்போனேன்
காற்றாய் உன்னைக் கடப்பேனென்று
கனவில் கூட நானறியேன்...

உன் பார்வை இனிமேல் பட்டால்கூட
எனைக் கடந்து சென்றிடுமே
உன் சுவாசம் மட்டும் என்னில் கலந்தென்
காதல் மட்டும் வென்றிடுமே!


தேடல்

பார்த்த நொடியிலேயே காதலிக்க தொடங்கிவிட்டேன் உன்னை

இன்றுவரை தேடிக்கொண்டிருக்கிறேன் என்னை

உன்னுள் எங்கு தொலைந்தேன் என்று தெரியாமல்

Wednesday 26 June 2013

நட்சத்திரம்

வானில் உள்ள நட்சத்திரங்கள் எல்லாம்

விழித்திருக்கும் இந்த வேளையில்

என்னுடைய அழகான நட்சத்திரம் ஒன்று

இப்போது தூங்கி கொண்டிருக்கிறது...
.
.
.

என்னுடன் சேர்ந்து இந்த நட்சத்திரங்களும்

என் தேவதையின் அழகை ரசிக்க கண்டேன்!!!

கவிதை

கவிதை எழுதுவது எனக்கும் பிடிக்கும் என்பது தெரியாமல் போய்விட்டது உன்

இரு விழி கவிதைகளை படிக்கும் வரை...

விழி

யாரும் பார்க்க முடியாத அந்த ஒரு அற்புதமான தருணத்தில் தான்

பூக்கள் மலரும் என்பார்கள்,

அந்த ஒரு நொடிக்காக

இங்கே நான் காத்துக்கொண்டிருக்கிறேன்...
.
.
.
என்னவள் விழி திறப்பதைக் காண...

அறிமுகம்

நானும் காதலிப்பேன் என்று நினைக்கவில்லை

அவளை பார்க்கும் வரை

இப்போது காதலிக்கத் தொடங்கிவிட்டேன் என் கண்களை...
.
.
.
அவளை எனக்கு அறிமுகம் செய்ததால்!!



பாதச் சுவடுகள்

உன் பாதச் சுவடுகளை பின் தொடர்ந்தேன்

நீ செல்லும் பாதையை அறிவதற்கு அல்ல

ஒரு கணமாவது அது என் திசையில் திரும்பாதா என்ற ஏக்கத்தில்

வேலி

பெண்ணே உன்னை காதலித்த பின்

உன்னை விட்டு செல்ல முடியாமல் தவிக்கிறேன்,

காரணம் இந்த காதலின் வலியால் அல்ல

உன் நினைவுகள் எனக்கு போட்ட வேலியால்.

Tuesday 25 June 2013

ஏக்கம்

என் தாயின்

கருவறையில் இருந்தபோது 

கூட துடித்து கொண்டிருந்த என் இதயம் 

இன்று முழுவதுமாக ஓய்வெடுக்க ஏங்குகிறது 

ஒரு நொடியாவது

 உன் மடியில் தூங்கும் வாய்ப்பு வந்தால்.

ஆசை

மலரென்று நினைத்தேன் உன்னை

     மணம் கொண்டு மனம் மயக்கியதால்...

நிலவென்று நினைத்தேன் உன்னை...

     நிழலாய் தொடரும் உன் நினைவுகளால்

கனவென்று நினைத்தேன் உன்னை...

     கண் மூடினாலும் தோன்றும் உன்னுருவங்களால்

மெய்யாக நினைக்கவில்லை ஏனோ...

      பொய்யாகி போன என் ஆசைகளால்.


MILKYWAY

பெண்ணே! நிலவென்று நினைத்தே உன்னை நெருங்கினேன்.....

பின்னர் தான் அறிந்து கொண்டேன்

பல கோடி யுகங்கள் பூமியை போல் சுற்றினாலும்

நெருங்கமுடியாத சூரியன் நீ...

காதல்

ஊனத்தை

கேலி செய்து கொண்டிருந்த நான்

அன்று தான்

அவர்களின் உண்மையான வலியினை உணர்ந்தேன்

என் காதலை சொல்ல முடியாமல் நானும்

ஒரு ஊமையாக அவள் முன் நின்ற பொழுது!!!

பட்டாம்பூச்சி

பறக்க துடிக்கிறது இந்த பட்டாம்பூச்சி
                               
                         உங்கள் இதயங்களை நோக்கி...