Friday 12 July 2013

புன்னகை

ஒவ்வொரு நாள் சந்திக்கும் போதும் புதிதாக தோன்றினாள்.

அவளிடமே காரணத்தைக் கேட்டேன்

சற்று வெட்கத்துடன் பதில் சொல்ல முடியாமல்

மௌனமாக புன்னகை செய்தாள்.

அப்போதுதான் புரிந்தது

நான் பேசிக்கொண்டிருப்பது என்னவள் என நினைத்து

இந்த அழகான பூக்களோடு

நான்

பல வருட கனவு

எண்ணிலடங்கா உன் நினைவுகள்

என்னையே நான் மறந்த நாட்கள்

உன் ஒரு பார்வைக்காக காத்திருந்த தருணங்கள்

உன் கண்களை காண துடிக்கும் என் கண்ணீர் துளிகள்

நீ செய்யும் ஒவ்வொரு செயலையும் பார்த்து இமைக்க மறந்த என் இமைகள்

உன் பாதச் சுவடுகளை பார்த்து பார்த்து தன் பாதையே மறந்த என் பாதங்கள்

கனவில் உன்னைக் கண்டதால் விழிக்க மறந்த எனது விழிகள்

உன் நிழலைத் தேடி அலைந்த என் நிஜங்கள்

உன் வருகையை தேடி தேடியே தொலைந்த என் நேரங்கள்

உன் பாதைகளை தேடிச் சென்ற என்னுடைய பயணங்கள்

உன் பெயரோடு சேர்ந்துவிட தவிக்கும் என் பெயர்

உன் வார்த்தைகளை உச்சரிக்க ஏங்கும் என் உதடுகள்

உன்  மௌனத்திற்கு உயிர் கொடுக்க துடிக்கும் என் மொழி

உன்  கனவுகளை களவாட நினைக்கும் என் கற்பனைகள்

உன்னுடனான பகலுக்காக ஏங்கும் என் இரவுகள்

நீ என்னை கடந்து செல்கையில் தன் வேளையையும் மறந்து துடிக்காமல் உன்னை கவனித்த என் இதயம்

உன்னை நினைத்து நினைத்து என்னையே இன்று மறக்க துணிந்த என் மனம்

உனக்காக என்னை மறந்த நான்.

என் கருவறை

உன்னை பத்துமாதம் கருவறையில் உன் தாய் சுமந்தாள் அது அவளின்
கடமையாககூட இருக்கலாம்,
ஆனால் உன்னை
என் இதயம் என்னும் கருவறையில் சுமந்துகொண்டிருக்கிறேன்.
கருவறையில் இருந்து நீ வெளிவரும்போது
உன் தாய் அடைந்த வேதனையைப் போல்
உன்னைப் பிரிகின்ற ஒவ்வொரு விநாடியும்
என் இதயம் அதை உணர்கிறது.  
என் இதயம் என்னும் கருவறையில்
வாழ்ந்துகொண்டிருக்கும் உன்னை
நான் இறந்த பின்பு கூட நிச்சயமாக சில நிமிடங்கள் அது சுமக்கும்


நினைவுகள்

அவள் நினைவுகளை
என் இதயத்தில் சேகரித்து வைத்தேன் அவள் அனுமதியின்றி
இன்று என்னிடம் கேட்கிறாள் யார் நீ என்று
எப்படி சொல்வேன்

அவள் என் இதயத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறாள் என்பதை???

உன்னால்

வைரத்தின் அழகைப் பற்றி எல்லோரும் சொன்னார்கள்
அன்று நான் நம்பவில்லை
இன்று தான் அதன் உண்மையான அழகை ரசித்துக்கொண்டிருக்கிறேன்

அது உன் கழுத்தில் குடியிருக்கையில்

தாய்

பிரசவத்தின் போது வலியால் துடிக்கிறாள் இவள்
சுற்றி இருந்தவர்களின் கண்களில் கண்ணீர் சற்று பரிதாபமாக
ஆனால் குழந்தை சிரித்துக்கொண்டு தான் இருக்கிறது
இப்போதுதான் இவள் கண்களில் கண்ணீர் வருகிறது
ஒரு வேளை தன் தாய் அடைந்த வேதனையை நினைக்கிறாளோ

என்னவோ!!!

இயலாமை

அவளுக்கு நான்
ஒரு பூவாவது கொடுக்க வேண்டும் என்றுதான் நினைத்திருந்தேன்
ஆனால் அவளுக்குதான் என் மீது எவ்வளவு பாசம்
பூச்செண்டோடு என்னைப் பார்க்க வந்திருக்கிறாள்
என் கைகள் அதை வாங்க துடிக்கின்றன
என்னால் தான் முடியவில்லை....

இந்தக் கல்லறையை விட்டு வர 

என் கனவில்

கண் விழித்து அவளுக்காக காத்திருந்தேன் 
ஏனோ அவள் இன்னும் வரவில்லை 
ஆனால் இப்போது அவள் நிச்சயம் வருவாள் கண்முன் ... 
என் கனவில்!!!

சந்தித்த நாள்

முதன்முதலில் அவளை சந்தித்த அந்த நாளைவிட
அவள் என்னை விட்டு பிரிந்த அந்த நாளை
என்னால் இன்னும் மறக்கமுடியவில்லை
அன்றுதான் அவளின் உண்மையான காதலை நானே உணர்ந்தேன்

அவள் கண்களில் இருந்து வழிந்த அந்த கண்ணீரின் வழியே

இடம்

அவளின் மனதில் ஒரு இடம் கேட்டேன்
கொடுத்தாள்....
எனக்கு மட்டுமல்ல என் காதலுக்கும் சேர்த்து

இந்தக் கல்லறையை!!!

சம்மதம்

அன்றோ 
அவளின் அந்த அழகான சிரிப்பினால் 
என் மனதை கொன்றாள்
இன்றோ 
நான் அவளிடம் என் காதலை சொன்ன பின்பு 
மௌனத்தினால் என்னை கொல்கிறாள்...

இருந்தும் 
அவளை நான் இன்னும் 
காதலித்துக் கொண்டுதான் இருக்கிறேன் 
அவள் மௌனத்தை சம்மதமாக நினைத்து

காரணம்

தினமும் சாலையில் நடந்து செல்கையில்
எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி 
சென்று கொண்டிருந்தேன், நீ என்னைக்
கடந்து சென்ற அந்த நொடி வரை.

இன்றும் அப்படியே செல்கிறேன்
ஆனால் என் கண்கள்  மட்டும் ஏனோ 
உன்னை மட்டுமே தேடி அலைகிறது


காரணம் சொல்வாயடி...