Sunday 30 June 2013

உன் கண்கள்

உன் கண்களை பார்த்த கணம்
என் இதயத்தில் ஏனோ ரணகளம்
என் காதலை சொல்ல ஏங்கினேன்
உன் கண்களை பார்த்து மயங்கினேன்

பெண்ணே உன்னை காணும் முன்னே
நான் என்னிடமே பேசியதில்லையே
உன்னைக் கண்ட பின்னே நான்
யாரிடமும் பேசவில்லையே

நான் இதுவரை எப்படி இருந்தேன் தெரியவில்லை
ஏன் இப்படி ஆனேன் புரியவில்லை
என் இதயம் கூட என் பேச்சை கேட்கலையே
அது உன்னை தானே நினைக்குதே
என் கண்கள் கூட உன்னை தான் தேடுதே
என் கால்கள் கூட உன் வழி போகுதே
என் வீட்டு கண்ணாடி கூட என்னைப்பார்த்து சிரிக்கிறதே

அடி பெண்ணே அடி பெண்ணே உன்னைக் காணும்முன்னே
ஒரே ஒருமுறை தான் சாவு என நினைத்திருந்தேன்
உன்னைக் கண்ட பின் ஏன் இப்படி
தினம் தினம் சாகின்றேன்

பெண்ணே இது உன் குற்றமா இல்லை
காதலின் ஆரம்பமா பேரின்பமா
இதைச் சொல்லத் தெரியலையே
சொல்லவும் முடியலையே இருந்தும் இதை
நான் ரசிக்கின்றேன்

அன்பே என் அன்பே உன்னை பார்த்த பின்பே
நான் எனை மறந்தேன் என் இதயத்தை இழந்தேன்
கனவிலே நான் மிதக்கின்றேன்
நினைவிலே நான்  பறக்கின்றேன்
என்னிடமே பொய் சொல்கிறேன்
உன்னிடம் சிக்கித்தவிக்கிறேன்
என்னைக் கொல்லாமல் கொல்லும் இந்தக் காதலை ரசிக்கிறேன்

பெண்ணே உனக்காகத் தானே நான் என்னை இழந்தேன்
நீயும் உன் உதட்டிலிருக்கும் அந்த சொல்லை இழக்க ஏன் மறுக்கிறாய்
ஏனடி மௌனம் கொள்கிறாய் ஏன்
இப்படி எனையும் கொல்கிறாய்

உன்னை முதன் முதல் பார்க்கையில் சிரிக்கிறாய்
பின்பு சற்று வெறுக்கிறாய்
இதுதான் காதலின் வேலையோ இல்லை
பெண்களின் மூலையோ புரிந்ததடி
இந்தக் காதலின் உண்மையே

No comments:

Post a Comment